Date:

‘கலாநிதி’ தொடர்பில் பாராளுமன்றம் விளக்கம்

பாராளுமன்ற இனையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றம் விளக்கமளித்துள்ளது.

அமைச்சரினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்ட தனது தகவல்கள் அடங்கிய படிவத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளடங்கப்படவில்லை என்பதுடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஏற்பட்ட தவறுதல் காரணமாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவின் பெயருக்கு முன்பாக கலாநிதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறோம்.

அத்துடன், பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களினதும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு, புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக 100 மடிக்கணினிகள் வழங்கி வைத்து சாதனை படைக்கும் ஹாஷிம் ஓமர் பவுண்டேஷன்

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின்...

13.56% ஆல் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை...

பலத்த மின்னல் குறித்து கடுமையான எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (14) முற்பகல் 11.30...

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பில் சுற்றறிக்கை

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம்...