ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நியமிக்கப்படவேண்டிய நான்கு உறுப்பினர்களின் விபரங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க, நிசாம் காரியப்பர் மற்றும் முத்து மொஹமட் ஆகியோரின் பெயர்களே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வருடப் பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர், முன்னதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார நியமிக்கப்பட்டார்.