புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபாவின் பெயர் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி.க்களைக் கைப்பற்றியது.
அதில் ஒரு ஆசனத்திற்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை முன்மொழிவதற்கு முன்னணி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.