கொழும்பு டொரிங்டனிலுள்ள நாற்சதுர ஆலயத்தின் நீண்ட கால தேவையான நாற்காலிகள் குறைபாட்டை ஆலயத்தின் போதகர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைமை அறங்காவலருமான கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் அவ் ஆலயத்துக்கு கடந்த(08) ஞாயிற்றுக்கிழமைநேரடி விஜயம் செய்து தனது ஜனனம் அறக்கட்டளை ஊடாக நாற்காலிகளை வழங்கி வைத்தார்.








