Date:

சிவப்பு சீனியின் வெட் வரியை நீக்க அமைச்சரவை பத்திரம்

சிகப்பு சீனி மீதான வட் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பாராளுமன்றத்தில், இன்று தெரிவித்தார்.

இலங்கைக்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு வட் வரி அறவிடப்படுவதில்லை என்றும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பழுப்பு சர்க்கரைக்கு 18% வட் மற்றும் 2.5% வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் போது ஒரு கிலோ சிகப்பு சீனி 300 ரூபாவாகவும் சந்தையில் ஒரு கிலோ வெள்ளை சீனி 220 ரூபாவாகவும் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிகப்பு சீனி அத்தியாவசியமற்ற பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளை சீனி அத்தியாவசியப் பொருளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தியாவுக்கு ஹெலிக்கொப்டர்களை வழங்கும் அமெரிக்கா

இந்திய இராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஓர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிக்கொப்டர்களில்,...

சூழலை சுத்தமாக பேணாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,...

ஈரான் வான்வெளி மீண்டும் திறப்பு

ஈரானில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே...

IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility)...