எதிர்காலத்தில், சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு காரணம், கடந்த காலங்களில் மோசமான வானிலையால் உள்ளூர் உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.
இதேவேளை, நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதுள்ள நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, சந்தைகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.