முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி சஷி பிரபா ரத்வத்த ஆகியோருக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை (05) பிணை வழங்கியுள்ளது.
இலங்கையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு டிசம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.