Date:

இஸ்ரேல் யுத்ததால் பாதிக்கப்பட்ட 27 பேர் நாடு திரும்பினர்

மத்திய கிழக்கில் லெபனான்-இஸ்ரேல் யுத்தம் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள்,    கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை (04) வந்தடைந்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களில் 05 சிறு பிள்ளைகள், 03 பெண்கள் மற்றும் 19 ஆண்கள் அடங்குவர்.

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, லெபனானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இவ்வாறே கடந்த 11/06, 11/12, 11/28, 12/01 ஆகிய திகதிகளில் இலங்கையர்கள் குழுவொன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன்படி லெபனானில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த 27 இலங்கையர்களும் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-648 இல் துபாயிலிருந்து புதன்கிழமை (04) இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகரசபை ஊழல்: பொதுமக்களிடம் உதவி கோரல்

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர...

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று...

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப்...

எரிவாயு தட்டுப்பாடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால்,லாஃப் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...