அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வருகின்ற வாரத்தில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருக்கின்றனர்.
அதன்படி வருகின்ற 13ஆம் திகதி புதன்கிழமை காலை 08 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான 04 மணிநேர வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றத்தை புதுப்பிக்கப்படாவிட்டால் இந்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.