Date:

ஐ.டி.எம் நேஷன் கெம்பஸ் இன்டநெஷனல் ( IDM NATION CAMPUS INTERNATIONAL ) கல்வி நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா

இந்த ஆண்டு, ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனில், 750 அதிகமான மாணவர்கள் பட்டதாரிகளாக தேர்வாகியுள்ளனர்.

நவம்பர் 30ஆம் தேதி, சனிக்கிழமை, ஐடிஎம் நேஷன்ஸ் கேம்பஸ் இன்டர்நேஷனல் (IDMNC) அதன் வருடாந்திர பட்டமளிப்பு விழாவை பண்டாரநாயக்க நினைவுச் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) விமர்சையாக நடத்தியது. IDMNC இன்டர்நேஷனல் கேம்பஸின் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இவ்விழாவில் 750 க்கும் மேற்பட்ட பட்டதாரர்களின் சாதனைகள் கௌரவிக்கப்படன.

சட்டத்துறை உட்பட பல்வேறு துறைகளில் இளமானி மற்றும் முதுமானி பட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவிற்கு பிரதம அதீதியாக, ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மூத்த பேராசிரியர் சுதந்த லியனகே தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

விருந்தினராக பேராசிரியர் சாரா வில்லியம்ஸ், பக்கிங்ஹம்ஷைர் நியூ யூனிவர்சிட்டியின் வணிக மற்றும் சட்டப்பீடத்தின் தலைவர் மற்றும் பல்கலைக்கழக கூட்டாண்மைகளின் தலைவர், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதோடு, மிஸ்டர் மைக் மெக்டர்மோட், டாக்டர் டெனிஸ் கைட், பேராசிரியர் ஸைனி பேய், பேராசிரியர் சுக்நிந்தர் பனேசர் மற்றும் மிஸ்டர் அலன் கிளார்க் போன்ற பல உயரிய கௌரவமானோரின் பங்களிப்பும் விருந்தினராக அமைந்தது.

IDMNC இன்டர்நேஷனல் கேம்பஸ், பக்கிங்ஹம்ஷைர் நியூ யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல உலகப்பிரசித்தியான கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சிறந்த கல்வியை வழங்கும் திறனுடன் விளங்குகிறது. செயற்கை நுட்ப கல்வி, மேலாண்மை, ஆசிரியர் கல்வி மற்றும் சட்டக் கல்வி போன்ற பல துறைகளில் மாணவர்களுக்கு UGC அங்கீகாரம் பெற்ற பட்டங்களை வழங்குகிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக, IDMNC இன்டர்நேஷனல், இலங்கையின் உயர் கல்வி துறையில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. கல்வியில் சர்வதேச தரங்களை பின்பற்றுவதுடன், உலகளாவிய திறன் வளங்களை மாணவர்களுக்கு வழங்கியது அதன் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு பட்டமளிப்பு விழா, IDMNC இன்டர்நேஷனலின் கல்வி மேம்பாட்டு மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் உறுதியை மேலும் வலியுறுத்திய நிகழ்வாக அமைந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு காலி முகத்திடலில் விற்பனை நிலையங்களை அகற்றுவதில் குழப்பம்

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றுவதற்காக நேற்று...

ஹல்கஹகும்புற துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது!

பொரளை, ஹல்கஹகும்புரவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிள் சாரதி,...

இந்தியாவுக்கு ஹெலிக்கொப்டர்களை வழங்கும் அமெரிக்கா

இந்திய இராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஓர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிக்கொப்டர்களில்,...

சூழலை சுத்தமாக பேணாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,...