மகாவலி கங்கை பெருக்கெடுப்பால், திருகோணமலை (Trincomalee) கிண்ணியா பிரதேச செயலக பிரிவிலுள்ள 04 கிராமங்களின் தரைவழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தோணிகள் மூலம் பயணம் செய்யும் பொதுமக்கள் இது ஒரு பாதுகாப்பான பயணம் இல்லை என்றும், பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை பெற்றுத் தருமாறு அரச அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
கிண்ணியா பிரதேசத்திலுள்ள, உப்பாறு கிராம சேவகர் பிரிவிலுள்ள கண்டல்காடு, மயிலப்பன்சேனை, காரை வெட்டுவான் மற்றும் சோலை வெட்டுவான் போன்ற கிராமங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.