பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை நீக்க விசேட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை நியாயமற்ற விலை உயர்வை அனுமதிக்க வேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அளகியவன்ன தெரிவித்துள்ளார்.