Date:

அர்ச்சுனா எம்.பி, நீதிமன்றில் சரண்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (28) மீளப்பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று, நிகழ்ந்த வீதி விபத்து தொடர்பாக ஆஜராகத் தவறியதற்காக டாக்டர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

டாக்டர் அர்ச்சுனாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த நிலையில் நீதிமன்றத் திகதியை மறந்துவிட்டதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த உண்மைகளை கருத்திற்கொண்ட மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, டாக்டர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெற தீர்மானித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானுக்கு ஆதரவு வழங்கும் சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு...

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...