2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட யோசனைகள் பாராளுமன்றத்தில் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்.
அதற்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு- செலவுத்திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் 10ஆம் திகதி நடத்தப்படும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.