சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்பட்டால் தொடருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகத் தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது கொவிட் பரவல் காரணமாகத் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனவே, சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்படும் பட்சத்தில் மீண்டும் தொடருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.