Date:

’ரவியின் பெயர் அனுப்பப்பட்டது ரணிலுக்கு தெரியாது’

“புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்காக ரவி கருணாநாயக்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னரே தெரிவித்ததாக கூறப்படுவது பொய்யான செய்தி” என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவர் மேலும் கூறுகையில்,

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியால் முன்னிறுத்தப்படும் வேட்பாளருக்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக கூறப்படும் கருத்தும் அடிப்படையற்றது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனங்களை நிரப்புவது தொடர்பில் நவம்பர் 19ஆம் திகதியன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, அபேவர்தன மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...