Date:

தேசியப் பட்டியலில் ரவி – வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய முடியாது

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவை எம்.பி.யாக நியமித்தமை தொடர்பான சர்ச்சை தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்ததன் பின்னர் வர்த்தமானி மூலம் ஆணைக்குழு தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.

“தேசியப் பட்டியல் வேட்புமனுவை கட்சியின் செயலாளர் உத்தியோகபூர்வமாக கையளித்தவுடன், ஆணைக்குழு அதனை உத்தியோகபூர்வமாகக் கருதி அதன்படி செயற்படுகிறது” என்று அவர் விளக்கினார். கட்சியின் உள்விவகாரங்களில் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய முடியாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். எனினும், இந்த நியமனம் ஒருமனதாக எடுக்கப்படாததால் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...