புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயகக் கட்சியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (19) இடம்பெற்றதுடன், அக்கூட்டத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சந்திப்பில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.