முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்குங்கள் என கூறுவதற்கு சாணக்கியனுக்கு என்ன உரிமை இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் சணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சணக்கியன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரலாறு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். காவடி எடுத்தாடும் சணக்கியனுக்கு எமது சமூகத்தை பேச அருகதை கிடையாது.
எமது மூச்சும் வியர்வையும் எமது சமூகத்திற்காகவே உள்ளது. எதனை பேச வேண்டும் எதை பேச கூடாது என தெரியாத நபரை அனுமதிக்க முடியாது.