கொரோனா காலப்பகுதியில் வாழ்வாதாரத்தினை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதிகள் YMMA கொழும்பு மத்திய கிளை ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை (02) தெமட்டகொட பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியுள்ள விதவைகள் மற்றும் ஆதரவற்ற 300 குடும்பங்களுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 பெறுமதியான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு YMMA மத்திய கொழும்பு கிளை தலைவர் நசாரி கமிலின் கீழ் YMMA மத்திய கொழும்பு கிளை உறுப்பினர்களுடன் இலவச உலர் உணவு பொதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டது.
இதற்கு YMMA மத்திய கொழும்பு கிளை நன்கொடையாளர்கள் பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.