Date:

ரணிலின் அமைச்சரவையிடம் விரைவில் விசாரணை

நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொய் கூறி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அன்றைய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க மற்றும்  தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 18 முன்னாள் அமைச்சர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம்  விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (11) பிற்பகல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 182 மருந்துகள் தட்டுப்பாடு என்றும் 17 மருந்துகள் இல்லை என்றும், மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் பொய்யாக அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் மருந்துத் தட்டுப்பாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அந்த மருந்துகள் என்னவென்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் அப்போது மருந்து தட்டுப்பாடு இல்லை என்பது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டில் தட்டுப்பாடு இல்லாத மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சந்தேக நபரான கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு எந்த அடிப்படையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என்பதை கண்டறிய வேண்டும்.

எனவே, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இருந்த 18 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...

வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று...

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

லான்சாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம்...