தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்ச்சசூடு : ஒருவர் காயம்
தாமரை கோபுர வளாகத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால், பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 29 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.