எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் 3,109 நடமாடும் ரோந்துப் படையினரும் 269 வீதித் தடைகளும் 241 கலவர எதிர்ப்புக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.