புத்தளம் மாவட்டம் இரட்டைக்கொடி சின்னத்தில் போட்டியிடும் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரைக்கார் அவர்களுக்கு மக்களின் ஏகோபித்த அமோக வரவேற்பால் முன்னிலையில் உள்ளார்.
* தனது இளமைப்பருவத்தில் இருந்தே மக்கள் சேவையில் பேரார்வம் கொண்டு மர்ஹூம் K.A. பாயிஸ் அவர்களின் அரசியல் பயிற்சிப் பட்டறையில் அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டவர்.
வெறும் அறிக்கைகளினால் சமூக ஊடகங்களை அலங்கரிக்காமல் இளம் வயது முதலே உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி சமூக சேவைகள் பல செய்து வருபவர். கட்டார் நாட்டில் இவரின் தொடர் சமூக சேவைக்காக புகழ் பெற்ற கட்டார் தேசிய அருங்காட்சியகத்தில் இவரது புகைப்படம் பொருந்திய விபரம் வைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையர் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டிய விடயமாகும் .
* சமூக சேவையின் பேரார்வத்தின் வெளிப்பாடுதான் இஷாம் மரைக்காரின் இந்த அரசியல் பிரவேசம் ஏனென்றால் மக்கள் சேவையினை முழுமையாக அனைவருக்கும் வழங்க வேண்டுமாயின் நமது கைகளில் அதிகாரம் இருக்க வேண்டும். அதுவே இவரின் இந்த அரசியல் பயணத்தின் துவக்கம். தகவல் தொழிநுட்பத் துறையில் (IT) பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர் (BSc IT (UK), MSc IT (UK) Computer Engineer) மும்மொழியிலும் சரளமாகப் பேசக்கூடியவர். இளைஞனாக இருந்தாலும் பக்குவப்பட்ட சிந்தனையும் பகுத்தறிந்து பிரச்சினைகளுக்கான தீர்வை அரசியல் மான்போடு அனுகக்கூடியவர்.
* தூர நோக்கோடும் மக்களுக்கான பல நல்ல திட்டங்களோடும் பயனித்துக் கொண்டிருப்பவர். குளிரூட்டப்பட்ட அறையில் இருந்த கொண்டு வெறுமனே மக்களின் பிரச்சினைகளை பேசுகிறேன் என நடிக்காமல் மக்களோடு மக்களாக வீதிகளிலே இறங்கி போராடிக்கொண்டிருப்பவர்.புத்தளம் அறுவக்காடு குப்பை கொட்டும் பிரச்சினைக்கு ஆரம்பம் முதல் இன்று வரை போராடிக்கொண்டிருப்பவர். மக்களின் வலியைப் புரிந்த ஒரே வேட்பாளர் இஷாம் மரைக்கார்.
* ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் ஒரு தலைவன் என்ற அடிப்படை நாதத்தோடு எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் நல்ல திறமையுள்ள தலைமைகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர்.
* மக்களின் எண்னோட்டத்தையும், நாடித்துடிப்பையும் வலிகளையும், நன்கு புரிந்த, அவர்களுக்காக துடிக்கின்ற, சிறந்த ஆளுமையுள்ள அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய ஒரு அரசியல் தலைவன் உருவாகுவது அரிதிலும் அரிது. அப்படிப்பட்ட ஒரு தலைவன் மக்களுக்காக மக்களோடு கைகோர்த்து வந்து முன் நிற்கிறான். அவரின் கைகளை வாக்கு எனும் ஆயுதத்தால் பலப்படுத்துவோம்.
* நாளைய தேசத்தை தூய தேசமாக்குவோம்.
*