சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை “பன்டோரா ஆவணங்கள்” அண்மையில் வெளியிட்டுள்ளன.
அதற்கமைய பன்டோரா ஆவணங்களை வெளிப்படுத்திய முறையில் நிரூபமா ராஜபக்ஷவிடம் 35,000,000,000 ரூபாய் சொத்துக்கள் உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தொடர்ந்து இவற்றினை பொய் என கூறுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிரூபமா ராஜபக்ஷவிடம் 35,000,000,000 ரூபாய் சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாக பன்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளது.
நிரூபமா முன்னாள் பிரதி அமைச்சராகும். பிரதி அமைச்சரிடம் அவ்வளவு பணம் எப்படி கிடைத்தது. தற்போது வரையிலும் நிரூபமாவின் கணவருக்கு விஐபி சலுகைகள் வழங்கப்படுகின்றது. இவை எந்த பின்னணியில் வழங்கப்படுகின்றதென தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.