Date:

PTA இன் கீழ் கைதான மூவர் விடுவிப்பு

தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், பயங்கரவாத தடைச்சட்டத்தின் (Prevention of Terrorism Act ) கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த  மூவரை  குற்றமற்றவர்கள் என இனங்கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அந்த மூவரையும், புதன்கிழமை (06)  விடுவித்தார்.

வவுனியா பெரிய புளியங்குளத்தைச் சேர்ந்த, ஸ்ரீ சுப்பிரமணியம் கிரிஜா,கந்தப்பு கயேந்திரன்,  பூந்தோட்டத்தை சேர்ந்த காக்கை சிங்கம் காந்தரூபன், ஆகியோரே  இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

சாளம்பைக்குளம் பகுதியில்  2019ஆண்டு தை மாதம், தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் பி அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில்  நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த எதிரிகளுக்கு எதிராக  நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவு பெற்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில்   தீர்ப்புக்காக, புதன்கிழமை (06) தவணை போடப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை தவிர்ந்து எவ்விதமான ஒப்புதல் சான்றிதழ்களும் சட்டமா அதிபர் திணைக்களத்தின்  அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்திற்கு அப்பால்  நிரூபிக்க தவறியுள்ளதாக     நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு அந்த மூவரையும் விடுவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் கைது: ஐ.தே.க ஆதரவாளர்கள் குவிந்தனர்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

“PTA வர்த்தமானி அடுத்த மாதம் இரத்து”

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் இன்று (22) காலை...

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற...