Date:

கண்டி உடுதெனியவில் முஸ்லிம் பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த கோர சம்பவம்

முஸ்லிம் பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கோர சம்பவம் ஒன்று நேற்று கண்டி உடுதெனியவில் இடம் பெற்றுள்ளது.

சித்தி ஆபிதா (வயது70) என்ற 5 பிள்ளைகளின் தாயே இப்பரிதாப சம்பவத்தில் மரணித்தவராவார்.

இச்சம்பவம் பற்றி
மேலும் தெரிய வருவதாவது.

வீட்டில் உறங்கி இருந்த வேளை நடு இரவில் வீட்டுக்குள் நுழைந்த இரு இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாயைக் கட்டிப் போட்டு சப்தமிடாதவாறு வைத்து மூச்சுத்திணறவைத்த பின்னரே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனரென தெரியருகிறது.
இலட்சக்கணக்கில் பெறுமதி மிக்க தங்க நகைகளும் பணமும் இச்சம்பவத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்வம் நிகழ்ந்த இடத்தில் மரணித்தவரின் கணவர் மட்டுமே வீட்டில் இருந்தாரென்றும் இவர் எழும்ப முடியாத பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவரென்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற சம்பவம் இதுவரையில் இவ்வூரில் இடம்பெற்றதில்லை என்பதால் இச்சம்பவம் இவ்வூரில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலாத்துஒய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர்களுக்கு இனி பாட புத்தகங்கள் இல்லை

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்...

வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு...

இந்திய- இலங்கை பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர்...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ்...