Date:

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடக்கிறது. அணி மாறும் மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5 ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இந்த மாகாணங்களின் புவியியல் அமைப்பின்படி கிழக்கு, மத்திய பகுதி, மலைப் பகுதி, பசிபிக் பகுதி என 4 வகையான நேர விகிதங்கள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி அமெரிக்க மாகாணங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வித்தியாசம் நிலவுகிறது.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர்.

இந்த மாகாணங்களில் அட்லாஸ் இன்டல் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதன்படி அரிசோனாவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கு 51.9 வீதம்  பேரும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 45.1 வீதம்
பேரும் ஆதரவு அளித்தனர்.

நெவாடாவில் ட்ரம்புக்கு 51.வீதம்  பேரும், கமலாவுக்கு 45.9 வீதம் பேரும், நார்த் கரோலினாவில் ட்ரம்புக்கு 50.4 வீதம்  பேரும், கமலாவுக்கு 46.8 வீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இதர 4 மாகாணங்களிலும் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...