ஹஜ் கமிட்டியில் நடந்த ஊழல்கள் சம்பந்தமாக இரு வாரங்களுக்குள் விசாரணை செய்து அரிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதம மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
ஹஜ் கமிட்டியில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஊழல்கள் சம்பந்தமாக அவ்வப்போது தகவல்கள் வெளி வருகின்றன.
ஹஜ் கமிட்டி என்பது புனித ஹஜ் யாத்திரைக்காக செல்லும் மக்களின் ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு, சட்டத்தால் கூட்டினைக்கப்பட்டு இலங்கை உயர்நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டு சட்ட வரையறைகளைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும்.
அண்மைக்காலமாக இது ஊழல் வாதிகளின், ஊழல் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி, கோடான கோடி ரூபாய்கள் ஊழல் செய்யும் அளவிற்கு மாறியது. தேர்தல்களின் போது தமக்கு ஆதரவு வழங்கும் ஆதரவாளர்களுக்கு பிழைப்புக்காக கொடுக்கும் ஒரு இடமாகவும், தமது நண்பர்களை திருப்தி படுத்த பதவி வழங்கும் இடமாகவும் மாறியது.
கடந்த காலங்களில் இவற்றுக்காக நியமிக்கப்பட்டவர்களில், ஊழல் குற்றச்சாட்டுகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஊழல் காரணமாக சிறை சென்றவர்கள், ஊழல் காரணமாக சேவைகளில் இருந்து விரட்டப்பட்டவர்கள், மேலும் ஒரு அமானிதத்தை, ஒரு பொதுச் சொத்தை, நம்பிக்கையோடு யளிக்க எந்தவித தகுதியற்றவர்களுமே இதில் நியமிக்கப்பட்டார்கள்.
நம்பிக்கையும், தூய்மையும், புனிதத்துவமும் முதல் தரத்தில் பாதுகாக்கப்ப பாதுகாக்கப்படவேண்டி ஹஜ் கமிட்டியை, இலங்கை கணக்காய்வாளர் பணிமனை பல முறை எச்சரிக்கை செய்து , கடந்த பத்து வருட வரலாற்றில் எட்டு வருடங்கள் நியாயத்தைத்தேடி நீதிமன்றம் செல்லும் அளவிற்கு ஹஜ்கமிட்டியின் நிலை கேவலமாக மாறியது.
ஹஜ் காலங்களின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட பல கோடிகள் பெறுமதியான 150 இலவச பேஸா விஸாக்களில் ஏற்பட்ட மோசடி, இது தொடர்பான முறையீடுகள் காரணமான சவ்தி அரேபியா அரசாங்கம் இதை 30 ஆகா குறைத்தது.
இதன் காரனமாக இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டதோடு, பேஸா வீஸா பற்றாக்குறையின் காரணமாக ஹஜ் முகவர்கள் கடும் கஷ்டங்களை எதிர்நோக்கினார்கள்.
அத்தோடு இறைபக்தியாளர்களான வறிய, ஏழை எளிய மக்களுக்காக சவுதி அரேபியா அரசரினால் வழங்கப்படும், கோடிகள் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள முடியாத அதி ஷொகுசு ( ROYAL PESENGER VISA ) வில் இலங்கையின் முதல் தர வியாபாரிகளும், அரசியல் வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் சென்று வந்தமை ஒரு கவலைக்குரிய விடயமாகும்.
மேலும் ஒரு ஹஜ் குழு அவர்கள் கூட்டிச்செல்லும் ஹாஜிகளின் எண்ணிக்கையின் அடிப்படை யில், தலைக்கு 4000 ரூபாய் வீதம் குறிப்பிட்ட ஹஜ் முகவரிடம் அறவிடப்படுகிறது. இது அக்கீகரிக்கப்பட்ட ஹஜ் வழிகாட்டல்களுக்கு நேர்மாற்றமானதாகும்.
மூன்று முறை தன் இஷ்டப்படி ராஜினாமா செய்து ஹஜ் கமிட்டி தலைவர் மீண்டும் மீண்டும் அதன் தலைவராக நியமிக்கப்பட்ட மர்மம் என்ன ?
இது சம்பந்தமாக அண்மையில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித்த ஹேரத் அவர்கள் ஹஜ் கமிட்டி, வக்பு சபை சம்பந்தமாக பாரிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தற்சந்தர்ப்பத்தில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படுமாயின் ஹாஜிகளுக்கு சிரமங்கள் ஏற்படும் எனவும், எனவே இது தொடர்பாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.