Date:

ஹொங்கொங் சிக்சர்ஸ்- கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!

ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக மொஹமட் அக்லக் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க மற்றும் தனஞ்சய லக்‌ஷான் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 73 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக சந்துன் வீரக்கொடி 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் ஊடாக 2024 ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை இலங்கை அணி 17 வருடங்களுக்கு பின்னர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக...

Breaking இஸ்ரேல் இரசாயன ஆலை மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்!  நச்சுக்கசிவு அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்! 

"வெறும் குண்டுவீச்சு மட்டுமல்ல... இது ஒரு இரசாயனப் பேரழிவுக்கான எச்சரிக்கை!"  தெற்கு...

எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள...

ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம்...