Date:

பயங்கரவாத தாக்குதல் குறித்து பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் தங்கும் பிரதேசத்தை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அந்த விசாரணைகளின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான ஏனைய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் சிறையில் உள்ள பல சந்தேகநபர்களை விசாரணை செய்வதற்கும் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் அனுமதிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...