Date:

‘பென்டோரா பேப்பர்ஸ்’: ட்ரான்ஸ்பெரன்ஸி விடுத்துள்ள கோரிக்கை

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பென்டோரா பேப்பர்ஸ்’ குறித்து உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பது அவசியம் என ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் இலங்கை நிறுவனம் கோரியுள்ளது.
குறித்த ஆவணங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில், இலங்கையின் அரச சொத்துக்கள் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்றே அந்த நிறுவனம் கேட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சுயாதீன விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அந்த நிறுவனம் கோரியுள்ளது. அத்துடன், குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் குறித்து நடத்தப்படும் விசாரணைக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படாமல், விசாரணைகளை நடத்த இடமளிக்குமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது.
உலக அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வர்ர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல் பட்டியலான பென்டோரா பேப்பர்ஸ்’ இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் அவரது கணவரான பிரபல வர்த்தகர் திருக்குமார் நடேசன் ஆகியோரது பெயரும் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...