முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய BMW கார் தொடர்பில் சட்டங்களை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்ட போதும், அவர் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் குருநாகல் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு தயார் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்திருந்த நிலையில், இன்று முன்னிலையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.