புதிய கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் செயற்பாடு நேற்று முதல் ஆரம்பமானது.
இதற்கமைய, பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்கவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் விநியோகிக்கப்படும் புதிய சாதாரண கடவுச்சீட்டானது கரு நீல நிறத்தைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கடவுச்சீட்டு 48 பக்கங்களைக் கொண்டுள்ளது.