நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (05) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இன்று (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, வடக்கு, கிழக்கில் சீனாவின் ஆதிக்கம் பெருகுவதை தாங்கள் விரும்பவில்லையென இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார செயலாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று (04) மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது அவர் குறித்த கருத்தை வெளிப்படுத்தியதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.