Date:

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இலங்கை நோக்கி வருகிறது

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992 கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் திறன்கொண்டது.
எவர் கிரீன் (Evergreen) கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், கடந்த ஜூலை மாதம் கொள்கலன் கையாள்கைக்கு இணைக்கப்பட்டது. நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து, கடந்த மாதம் புறப்பட்ட குறித்த கப்பல், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இது போன்ற பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக்கூடிய 24 துறைமுகங்கள் உலகில் உள்ளன. எனினும், தெற்காசியாவில் அந்தக் கப்பல் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...

மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிரான மேல்முறையீடு நிராகரிப்பு

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் (Najib Razak) சாதகமாக உச்சநீதிமன்றம்...

மேஜர் ஜெனரல் மஜீத் இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதி நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...