Date:

நுவரெலியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்

நுவரெலியாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரான கன்னியாஸ்திரியை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 12 மாணவிகளை குறித்த அதிபர் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாணவிகளை தாக்கிய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கை மற்றும் கன்னியாஸ்திரியின் மனநலம் குறித்த மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், தாக்குதலுக்கு உள்ளான மாணவி ஒருவர் நான்கு நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா நீதவான் உத்தரவிட்டதை அடுத்து அவர் மன்றில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடாஷா விவகாரத்தில் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பிப்பு!

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான...

எரிவாயுத் தட்டுப்பாடு இல்லை என்கிறது லிட்ரோ!

எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு...

Breaking புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு...

துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம...