Date:

(Clicks) பாழடைந்த நிலையில் மற்றுமொரு அரச வாகனம் கண்டுபிடிப்பு

செ.திவாகரன் நானுஓயா நிருபர்

முன்னால் போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்று பாழடைந்த இடத்தில் மறைத்து விடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிந்ததை திங்கட்கிழமை (14) நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ் வாகனம் நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான கட்டடத்திற்கு அருகில் மறைத்து விடப்பட்ட நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த வாகனம் பல வருடங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது முன் பக்க இலக்கத்தகடு இன்றியும் பின் பகுதியில் மாத்திரம் இலக்கத்தகடு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஜீப் வாகனமும் மற்றுமொரு ஜீப் வாகனமும் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட தொடர்பு அதிகாரியின் பாவனைக்காக அமைச்சரினால் வழங்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் இதனுடன் தொடர்புடைய மற்றொரு ஜீப் வண்டியை கண்டுபிடிக்க பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பிரதேசத்தில் அரச வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது இவ் ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...