Date:

செல்லுபடி காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிக்க போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, 2021 ஏப்ரல் 1 ஆம் திகதி தொடக்கம் 2021 செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகும் அனைத்து அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேற்கண்ட காலாவதி திகதியிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

2021 ஒக்டோபர் 1 தொடக்கம் 2022 மார்ச் 31 திகதி வரை காலாவதியாகும் அனைத்து அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேற்கண்ட காலாவதி திகதியிலிருந்து காலம் 06 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்கள், தாமதமாக புதுப்பிக்க விதிக்கப்படும் அபராதத்தை செலுத்தாமல் இந்த காலத்துக்கு பின்னர் தங்கள் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க முடியும்.

கெரோனா தொற்று காரணமாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மூடப்பட்டதால் சாரதி அனுமதிப் பத்திரம் பெற காத்திருந்தவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...