நாட்டில் பல பிரதேசங்களில் தற்போது நிலவும் மோசமான வானிலையை அடுத்து, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல பாடசாலைகளை திங்கட்கிழமை (14) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ மற்றும் கடுவெல மற்றும் கம்பஹா மாவட்டத்தில் களனி மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை (14) மூடப்படும் என மேல்மாகாண பணிப்பாளர் பிரேம ரஞ்சித் தேவபந்து தெரிவித்துள்ளார்.