டாடா குழுமத்தின் தலைவராக இருந்த 86 வயதான ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (09) இரவு காலமானார். இதனையடுத்து மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை, அவரது வீட்டில் இருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் தெற்கு மும்பையில் உள்ள என்சிபிஏ எனப்படும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், சிவ சேனா(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்