இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தார்.
நேற்று மாலை ஸ்ரீதலதா மாளிகைக்குச் சென்ற அவர், பின்னர் திருகோணமலையில் எண்ணெய் குதங்கள் அடங்கிய வளாகத்தையும் பார்வையிட்டதுடன், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.