செப்டம்பர் 12 ஆம் திகதி புத்தளம் சாஹிரா ஆரம்ப பள்ளி பாடசாலையில் பல பிரதேசங்களில் ஆசிரியர்களுக்கான இலவச வழிகாட்டல் நிகழ்வொன்று நடைபெற்றது.
இதில் சுமார் 400 ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கலந்து சிறப்பித்தனர் இந் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவர்களுக்கும் இலவச சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
ஐக்கிய அமெரிக்காவின் புகழ்பெற்ற உபவேந்தர் Dr.Cary Goullston மற்றும் அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் அவர்களும் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வினை மெருகூட்டும் வகையில் Amazon College, Zahirians 92, I-Soft, CBS Foundation, Picta, ACUMLYF ஆகிய நிறுவனங்கள் அனுசரணை வழங்கியது குறிப்பிடத்தக்கது.