ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (25) மாலை 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார், அங்கு அவர் எதிர்காலத்திற்கான அரசாங்க திட்டங்களைப் பற்றி பேசவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை பதவியேற்ற திஸாநாயக்க, அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 5.6 மில்லியன் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
15 வெவ்வேறு துறைகளை மேற்பார்வை செய்யும் மூன்று பேர் கொண்ட அமைச்சரவையுடன் பிரதமர் ஹரினி அமரசூரியவை நேற்று ஜனாதிபதி நியமித்தார்.
நவம்பர் 14, 2024 அன்று பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு அழைப்பு விடுத்து ஜனாதிபதி பாராளுமன்றத்தையும் கலைத்தமையும் குறிப்பிடத்தக்கது.