அடுத்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் நிதியமமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
பாதீடு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெறவுள்ளதோடு 16 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.