தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் கடைபிடிக்க வேண்டி புதிய சுகாதார நடைமுறைகள் வௌியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மத வழிப்பட்டுத்தளங்களில் கூட்டுப் பிரார்தனைகளில் ஈடுபட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிக வகுப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்துவற்கு அனுமதி வழங்கப்படவில்லை.