சர்ச்சைக்குரிய சதோச வெள்ளைபூண்டு மோசடி குறித்து வர்த்தக அமைச்சு தனி விசாரணையைத் தொடங்குகிறது என அதன் செயலாளர் பத்ராணி ஜெயவர்த்தன இன்று (30) தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சதோசவின் ஆரம்ப விசாரணை அறிக்கைகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.
அதன்படி, அடுத்த சில நாள்களுக்குள் அமைச்சு தனது விசாரணையைத் தொடங்கும் என்று, அவர் மேலும் கூறினார்.