Date:

பழம்பெறும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பல இரசிகர்களால் கவரப்பட்டவர் ஏ.சகுந்தலா. இவர் கடந்த 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்த ‘சிஐடி சங்கர்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானதால், அவர் பின்னர் ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சகுந்தலா, சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி மூவரும் நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தன் நடன திறமையை வெளிப்படுத்தினார். இந்த வாய்ப்புகள் அவர் திரைப்பட உலகில் நுழைய வழிவகுத்தன.

அதன்பின்னர், ‘படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

திரையுலகில் இருந்து விலகிய பிறகு, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து இரசிகர்களின் அன்பை பெற்றார். காலப்போக்கில், வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகளுடன் தங்கியிருந்த அவர், நேற்று திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சிஐடி சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலகத்தின் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று 2 வது தடவையாகவும் தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி...

இளஞ்சிவப்பு புதன்கிழமை

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய...

நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் நாளை (23) 10 மணி நேர...

Breaking துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் பலி

அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வெலிகம பிரதேச...