Date:

breaking இராதாகிருஷ்ணன், உதயகுமார் ரணிலுக்கு ஆதரவு தொடர்பில் வௌியான அறிவிப்பு

 

செய்தி – கொழும்பு நிருபர்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளமை தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(27)  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர்கள் இருவரும், எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி தங்களுடைய ஆதரவை தெரிவிப்பர் என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினுடாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பளம் சாத்தியமாகி இருப்பதாகவும், எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி அந்த கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நம்பிக்கை வெளியிட்டார்.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், எம். உதயகுமார் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை; ரியாத்திலுள்ள தூதரகத்தின் மீதும் தாக்குதல்

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு...

Breaking போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்

ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்...

லெபனான் எல்லைக்குள் புதிய முற்றுகை!

இஸ்ரேலிய எல்லைக் கிராமங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், லெபனானில் மேலதிக...

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்து அரசின் நிலைப்பாட்டை கூறிய ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய...