இன்று முதல் அமுலாகும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, தேயிலை துறையினருக்கு 4,000 ரூபா உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த சலுகைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.